முன்னாள் ஜனாதிபதிகள் மீது அக்கறை கொள்வதை நிறுத்துகிறோம். அவற்றைச் செய்ய முடியாது. சிறிய எண்ணிக்கையல்ல. 163 காவலர்கள் கோரப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் உட்பட 16 முதல் 17 வாகனங்கள் கோரப்பட்டுள்ளன. வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கையை விட அதிகமான சமையல்காரர்கள் கோரப்படுகிறார்கள். இப்படி ஒரு நாட்டை உருவாக்க முடியாத
பத்தேகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கும், அவர்கள் சார்பாக அரசாங்கம் ஏற்றுள்ள செலவினச் சுமையை முற்றாக அகற்றுவதற்கும் தேவையான சுற்றறிக்கைகள் மற்றும் சட்டங்களை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.