பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்குமாறு கோரியும் அரசாங்கத்தின் அடக்கு முறையை நிறுத்துமாறு கோரியும் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
இந்த எதிர்பார்ப்பாட்ட பேரணியில் மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்த ஏனைய அனைத்து எதிர்கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.
விசேடமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 43 படை அணையின் தலைவர் சம்பிக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டு இருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னோக்கி நகரவிடாது பொலீசார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் போது பதிவான சில புகைப்படங்கள் வருமாறு,