தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள தணமல்வில பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
நேற்று (04) நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக 17 வாக்குகளும், ஆதரவாக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
தணமல்வில பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 16 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிக்கு 18 உறுப்பினர்களும் உள்ளனர்.
நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின்போது ஆளும் தரப்பைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் சுகயீனம் காரணமாக சபைக்கு சமூகமளிக்கவில்லை. அதேவேளை, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினரும் சபைக்கு வருகை தரவில்லை.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள பெண் உறுப்பினர் ஒருவரும் நேற்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
