ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமுர்த்தி மானியத்தை தொடர வேண்டும், உர மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரவலாக்கப்பட்ட ஒதுக்கீட்டை மீள வழங்க வேண்டும், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பின் போது வேலைவாய்ப்பை இழக்கக்கூடாது என்பனவே நான்கு கோரிக்கைகளாகும் என கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயலாளரினால் கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் இந்த நான்கு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த பொறிமுறை சமுர்த்தி இயக்கம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அந்த கடிதத்தில் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.