நவம்பர் ’21’ இற்கு முன்னர்புதிய அமைச்சரவை

0
53


பொதுத் தேர்தல் முடிந்து ஒரு வாரத்துக்குள் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டமிட்டுள்ளார்.

முதல் நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் அமைச்சர்கள் அமைச்சுகளில் பொறுப்பேற்கும் வகையில் இந்தச் செயல்பாட்டை முன்னெடுக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற உள்ளதுடன், தேர்தல் முடிந்த முதல் வாரத்திலேயே பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

அதன் முதல் கட்டமாக 25 இற்கும் குறைவான அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் பேச்சுகளை நடத்தியுள்ளதுடன், அமைச்சுகள் அனைத்து ஏற்கனவே விஞ்ஞானப்பூர்வமாக தயாரிக்கப்பட்டுள்ளன.

கல்வி, சுகாதாரம், வர்த்தகம், நெடுஞ்சாலை உட்பட அனைத்து அமைச்சுகளிலும் அமைச்சுகளுக்கு பொருத்தமில்லாத வகையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்த திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்கள் பொருத்தமான அமைச்சுகளின் கீழ் கொண்டுவரும் வகையில் அமைச்சுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அமைச்சர்களும் தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here