மக்கள் ஆணையால்தமிழரசு மீள நிமிரும் – பிரசாரக் கூட்டத்தில் சிறீதரன் தெரிவிப்பு

Date:

“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான், எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

சிறீதரனை ஆதரித்து வன்னேரிக்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இதுவரை காலமும் தமிழ் மக்களின் அரசியல் வெறுமையின் வடிகாலாக, தமிழ்த் தேசிய அடையாளமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி இருந்து வந்ததைப் போலவே, உட்கட்சி விரிசல்களைச் சீரமைத்து, எமது மக்களின் அரசியல் அடையாளமாகக் கட்சியை மீளக்கட்டியெழுப்பும் காலப் பணி எமக்கிருப்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

அத்தகைய பணிகளை நாம் ஆற்றுவதற்கு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கப் போகும் ஆணையே உந்துசக்தியாக மாறும். இதனை உணர்ந்த எமது மக்களின் தெரிவுகள் அரசியல் அறம் சார்ந்தும், தமிழ்த் தேசியக் கொள்கை சார்ந்துமே அமையும்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...