பேக்கரி பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் கவனம்

Date:

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ள நிலையில், பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு வீதம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையிடம் மக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் மதிப்பு வலுவடைந்ததன் பலன் மற்றும் மூலப்பொருட்களுக்கான விலை குறைப்பு ஆகியவற்றின் பலனை மக்களுக்கு வழங்குவதற்கு பேக்கரி, உணவக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தார்களா என்பதை ஆராய்வதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விலை குறைப்பு தொடர்பாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...

வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்றும் (02) காலை 8.00...

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...