முன்னாள் அமைச்சர்கள் 18 பேரிடம் வாக்குமூலம்

Date:

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற மருந்துகளை அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், அமைச்சரவையில் அங்கம் வகித்த 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான டிரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல் சிறிபால, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்துகளை இறக்குமதி செய்தல் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 18 பேரிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, இது தொடர்பில் உத்தரவு பிறப்பிக்குமாறு மாளிகாகந்த நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நீதவான் அனுமதி வழங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...