சஜித் பிரேமதாஸவின் பொறுப்பு குறித்து நாமல் கருத்து

0
57

ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு செலவுத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி அதனை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு உரிய தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல் வரவு செலவுத் திட்டத்தை சவால் செய்வதில் அர்த்தமில்லை என்றும் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்துவதால் கொழும்பு நகர எல்லைக்கு நிவாரணம் கிடைத்திருக்கலாம் எனவும் நாமல் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்னைய வரவு செலவுத் திட்டத்தில் பல விடயங்கள் இடம்பெற்றுள்ளதால், முன்னைய வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவான ஒருவரால் அதனை எதிர்க்க முடியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

ஆனால் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் சமர்பிப்பது நியாயமானதா என்பதில் சிக்கல் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here