சுவர் இடிந்து வீழ்ந்து 6 வயது மாணவர் பலி, ஐவர் வைத்தியசாலையில்

0
74
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

வெல்லம்பிட்டியவில் பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 06 வயது மாணவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவர்கள் கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் ஒரு மாணவர் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஐவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here