மட்டக்களப்பில் 3 ஆசனங்களுடன் தமிழரசு வெற்றி – சாணக்கியனுக்கு அதிகூடிய விருப்பு வாக்குகள்!

Date:

  • பிள்ளையான் கட்சி இம்முறை தோல்வி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 96 ஆயிரத்து 975 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

முன்னாள் எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன் 65 ஆயிரத்து 458 விருப்பு வாக்குகளையும், முன்னாள் எம்.பி. ஞானமுத்து ஸ்ரீநேசன் 22 ஆயிரத்து 773 விருப்பு வாக்குகளையும், இளையதம்பி சிறிநாத் 21 ஆயிரத்து 202 விருப்பு வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றம் செல்கின்றனர்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி 55 ஆயிரத்து 498 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் கந்தசாமி பிரபு 14 ஆயிரத்து 856 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்கின்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40 ஆயிரத்து 139 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா 32 ஆயிரத்து 410 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்கின்றார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 31 ஆயிரத்து 256 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் எந்தவொரு ஆசனங்களையும் கைப்பற்றவில்லை.

கடந்த தேர்தலில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றிருந்தமையுடன் இராஜாங்க அமைச்சுப் பதவியை வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...