மக்களின் நலன்களுக்காக இருதரப்பு உறவினை மேலும் வலுவாக்க இந்தியா உறுதி

Date:

பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சக ஜனநாயக நாடாக இந்தியா, இந்த மக்கள் ஆணையினை வரவேற்பதாகவும், மக்களின் நலன்களுக்காக இருதரப்பு உறவினை மேலும் வலுவாக்க உறுதி கொண்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த விடயம் பகிரப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...