குறைந்த விலையில் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது

0
11

அரசாங்கம் மக்களுக்கு எரிபொருளை, கப்பலில் இருந்து இறக்கும் விலையை விடவும் குறைந்த விலையில் வழங்கி வருவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஞ்சள் நிற எரிவாயு நிறுவனம் விலையை அதிகரித்தது. ஆனால் நாம் நீல நிற எரிவாயுவின் விலையை அதிகரித்தோமா? அதிகரிக்கவில்லை. அரசாங்கத்திற்குச் சொந்தமான எரிவாயுவை மக்களுக்காகக் குறைந்த விலையில் வழங்குகிறோம்.

தற்போது எரிபொருளை மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் மாதாந்தம் பல பில்லியன் ரூபாய் மேலதிக செலவுகளைச் செய்து வருகிறது.

எரிபொருளை கப்பலில் இருந்து இறக்கும் விலைக்கே வழங்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு வழங்கினால் தற்போதைய விலையை விட எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும்.

எனவே, இந்த அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகிறது. சம்பளத்தை மாத்திரம் அதிகரிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா புயலினால் சேதமடைந்த நிக்கவெவ, அட்டகொட, சமகி அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (15) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எனினும், பிரதி அமைச்சரின் கூற்றில் குறிப்பிடப்படுவது போன்று அனைத்து எரிபொருட்களும் கப்பலில் இருந்து இறக்கும் விலையை விடக் குறைந்த விலையில் வழங்கப்படுவதில்லை.

எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி, டீசல் லீற்றருக்கான விலை நிர்ணயிக்கப்படும்போது கப்பலில் இருந்து இறக்கும் விலையுடன் வரிகள் மற்றும் விநியோகச் செலவுகள் சேர்க்கப்படுகின்றன. இதன்படி கணக்கிடப்படும் டீசல் லீற்றரின் விலையில் மாத்திரம் அரச திறைசேரியினால் 70 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here