இலங்கை கிரிக்கெட் விவகாரம்: ஐ.சி.சி.யிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை உபக்குழுவுக்கு ஜனாதிபதி அனுமதி

0
217

இலங்கை கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை உபகுழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (நவ17) காலை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய கஞ்சன விஜேசேகர, அமைச்சரவை உபக் குழு ஐசிசி அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்த அனுமதி கோரியுள்ளதாக கூறியுள்ளார்.

அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான உபக்குழுவில் அமைச்சர்களான திரன் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here