எதிர்கட்சித் தலைவர் ஹர்ஷ, கட்சித் தலைவர் சஜித்?

0
186

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட கடும் தோல்வியுடன் கட்சியில் வலுவான மாற்றம் தேவை என்று சமகி ஜன பலவேகவில் ஒரு சித்தாந்தம் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாசவின் தலைமையில் இதுவரை இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களும் இரண்டு பொதுத் தேர்தல்களும் தோல்வியடைந்துள்ள நிலையில், இரண்டிலும் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு அதிகாரம் கிடைக்காமல் தடுப்பதில் கட்சியில் பலர் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சஜித் பிரேமதாச 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஆளும் கட்சிக்கு 150 கேள்விகளை முன்வைத்த போதும் அது மக்களைக் கவரவில்லை என்பது அவர்களின் கருத்தாகும்.

அத்துடன், மக்கள் பாரம்பரிய அரசியலை முற்றாக நிராகரித்து இடதுசாரி அரசை உருவாக்கி மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் அதிகாரத்தை வழங்கியிருக்கும் இவ்வேளையில் sjb பிரதான எதிர்க்கட்சியாக பலமான மாற்றத்தை மக்களிடம் காட்ட வேண்டும்.

கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச தொடர்ந்தும் இருக்கும் நிலையில், கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென கட்சிக்குள்ளேயே பலத்த கருத்து எழுந்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹர்ஷ டி சில்வா கட்சியில் பிரபல்யமான, படித்த, புத்திசாலி மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவராக இருப்பதால், அவர் இந்த நேரத்தில் எதிர்க்கட்சியை வழிநடத்த பொருத்தமானவர் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சியில் உள்ள பலர் இந்த முன்மொழிவுக்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here