புதிய அரசாங்கத்தினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அடுத்த ஓரிரு தினங்களில் 26-28 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளவாறு தமது கட்சி இராஜாங்க அமைச்சர்களை நியமிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில அமைச்சரவை அமைச்சுக்களுக்கு இரண்டு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்ற போதிலும் அனைத்து அமைச்சுக்களுக்கும் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.