சொல்லப்படாத பல சம்பவங்கள் மற்றும் இரகசியங்கள் அடங்கிய புத்தகமொன்று அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர் ஆட்சியில் இருந்து விலகுவது குறித்து தீர்மானம் பல குழப்பமான சம்பவங்கள் காரணமாக இதுபோன்ற முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
வெளிவராத பல சம்பவங்களின் விவரங்கள் அடங்கிய இந்த புத்தகம் வெளியிடப்பட்ட பின்னர், தனது கதி என்னவென்று தெரியவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
N.S