தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் பேராதனை நகரில் 4 கடைகளின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் கடை ஒன்றில் இருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த மண்சரிவு நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது.
பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன்னரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்த கடை உரிமையாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவித்திருந்தும், அவர்கள் அவ்வாறு செய்யாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.