யாழ்ப்பானம் இந்து கல்லூரி அருகிலுள்ள நீராவியடி பகுதியில் இரவு நேரங்களில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் கமரா மூலம் வீடியோக்களை எடுத்து மிரட்டும் மர்ம நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
குறித்த நபருக்கு எதிராக சில பெண்கள் சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அதற்கமையவே குறித்த சந்தேக நபரை கண்காணிப்பு கமரா உதவியுடன் கைது செய்த யாழ். பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த நபரை யாழ்ப்பான பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பிரிவில் பாரபடுத்தினர்.
இதன்படி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.