திலங்கவை பொதுச் செயலாளராக ஏற்க மாட்டோம் ; கூட்டணி கட்சிகள் மைத்திரிக்கு எச்சரிக்கை!

0
171

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர நீக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் ஆச்சரியமளிப்பதாக கூட்டணியின் ஐந்து கட்சிகள் தெரிவிக்கின்றன.

மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி, தேச விமுக்தி ஜனதா கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பொதுச் செயலாளரை நீக்குவது குறித்தோ, புதிய பொதுச் செயலாளரின் நியமனம் குறித்தோ இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியலமைப்பு மற்றும் முன்னைய உதாரணத்திற்கு அமைவாக அது தொடர்பில் மைத்திரி கட்சிகளுக்கு நிறைவேற்று சபை அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அந்தவகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக திலங்க சுமதிபாலவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கட்சிகள் அறிவிக்கின்றன.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here