பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பண்டிகைக் காலங்களில் காலாவதியான மற்றும் மாற்றப்பட்ட தகவல்களுடன் பல பொருட்கள் சந்தைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் விசேட அவதானத்துடன் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி, ஆடைகள், மின்சாதனங்கள் மற்றும் இதர பொருட்களும் அதிக தேவையுடன் விற்பனை செய்யப்படுவதால், இது தொடர்பாகவும் சோதனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்க விரும்பினால் 1977 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.