இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு ஆயுதம் பயிற்சி! பரபரப்பு தகவலை வெளியிட்டார் ஹக்கீம்!!  

Date:

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கையர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டம் இருப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

காசா பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு இந்த இலங்கையர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாக ஹக்கீம் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு இஸ்ரேல் சென்று ஆயுத பயிற்சி பெறுவோர் மூலம் நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவனம் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த வெளிநாட்டு  வேலைவாய்ப்பு அமைச்சர் இலங்கை பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள இந்த இனவாத கருத்தை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...