சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு

Date:

உத்தரகாண்ட் – உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.

கடந்த 12 ஆம் திகதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர்.

தொடர்ந்து இன்று (28) 17 ஆவது நாளாக மீட்புப் பணி நடைபெற்றது. இன்று மாலை தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. இதனால் அவர்களது உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்தனர்.

இதற்கிடையே, ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...