முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (24) நிதிக் குற்ற விசாரணைப் பிரிவான FCID முன்னிலையில் ஆஜராக முடியவில்லை என அவரது சார்பில் முன்னிலையான சட்டத்தரணி FCID அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
கண் சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக அவர் தற்போது சிங்கப்பூருக்குச் சென்றுள்ளதால், இந்தச் சந்தர்ப்பத்தில் விசாரணையில் பங்கேற்க முடியவில்லை என FCIDக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்ஷவின் ஆதரவின் கீழ் செயல்பட்ட ‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) அறக்கட்டளையுடன் தொடர்புடைய பரிவர்த்தனைகள் குறித்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஷிரந்தி ராஜபக்ஷ செப்டம்பர் 16ஆம் திகதி சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
