பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை இம்மாதம் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பான பரிவர்த்தனை குறித்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
