இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – 5 ஆம் திகதி விசாரணை!

Date:

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இடைக்கால குழுவை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் நீதிமன்ற திகதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 5 ஆம் திகதி குறித்த விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை முன்வைக்கமாறு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

நிலக்கரி மோசடி பொய்! எதிர்கட்சிக்கு தோல்வி

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும்...

JVPயின் முழுநேர தொண்டர்கள் ராஜிதவிடம் புலம்பல்

தற்போதைய அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...