முன்னாள் ஜனாதிபதி, பிரதமரிடம் விசாரணை

Date:

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கியதுடன் அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் அமைச்சரவை குழுவைப் போன்று பிரதமரும் பொறுப்புக்கூற வேண்டியவர் என்பதால் எதிர்காலத்தில் அது தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்படும்.

சுகாதார அமைச்சர் என்ற வகையில் கெஹலிய ரம்புக்வெல்ல இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்திருந்தார். அதன்படி, அவர் கடந்த காலங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார், இது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இதன்படி, அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, ரமேஷ் பத்திரன, விஜேதாச ராஜபக்ஷ, நளீன் பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க மற்றும் நசீர் அஹமட் ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக்...

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...