ரணிலுடன் எந்தப் புதிய உரையாடலும் கடைசியாக முடிந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும் என பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச மேற்பார்வையின் கீழ் கடைசி முறையான அரசியல் பேச்சுவார்த்தைகள் 2006இல் ஒஸ்லோவில் தமிழ் ஈழ விடுதலை புலிகளுடன் நடந்தன.
தமிழர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணிலுடனான எந்தவொரு அரசியல் உரையாடலும் கடைசி சமாதானப் பேச்சுக்கள் முடிவடைந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
தமிழர்களை பேச அழைப்பது ரணில் சர்வதேச நாடுகளிடையே தனது ஒளிக்கீற்றை உயர்த்த விளையாடும் தந்திரம்.இது வெறும் பேச்சு, செயலுக்கு எட்டாது.
பணக்கார நாடுகளையும் சர்வதேச நாணய நிதியத்தையும் வெல்வதற்கும் இலங்கையை மேலும் பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கும் ரணில் தமிழர்களுடன் முன்னேற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
சில வாரங்களுக்கு முன்னர், புதுடெல்லிக்கான நோர்வே தூதுவர், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மத்தியஸ்தம் செய்ய தனது நாட்டின் விருப்பத்தை தெளிவான அழைப்போடு தெரிவித்தார்.
கடைசிப் பேச்சுவார்த்தை நோர்வேயின் மத்தியஸ்தம். தமிழர்கள் மற்றும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான அரசியல் தீர்விற்கான முறையான விவாதங்களுக்கு மத்தியஸ்தம் செய்ய நோர்வே அரசாங்கத்தின் உதவியை மீண்டும் நாட வேண்டும்.
இலங்கை நிதி மற்றும் அரசியல் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. எமது தமிழ் இறையாண்மைக்கு அழுத்தம் கொடுக்கும் இந்த வாய்ப்பை நாம் தவறவிடக் கூடாது. இது போன்ற வாய்ப்பு தமிழர்களுக்கு இனியும் வராது.
கொழும்பைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் நோர்வே அல்லது அமெரிக்க பங்கேற்பு இல்லாமல் ரணிலுடன் பேசச் சென்றால், இந்தத் தமிழர்கள் அரசியல் தீர்வில் உண்மையான அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாகிறது.
நோர்வேயின் மத்தியஸ்தம் இருந்தபோதிலும், சிங்களவர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இலங்கை எதற்கும் உடன்படாது என்பது நிரூபணமாகிவிடும். இதனால் நோர்வேயும் அமெரிக்காவும் இதை ஐ.நா மேற்பார்வையில் வாக்கெடுப்புக்கு கொண்டு செல்லும்.
இந்த சாம்-விக்கி-கஜன் கும்பல்களுக்கு அது நன்றாகவே தெரியும். ஆனால் அவர்கள் வாக்கெடுப்பு அல்லது தமிழ் இறையாண்மையை விரும்பவில்லை. தமிழ் இறையாண்மை இருந்தால், சாம், விக்கி, கஜன் ஆகியோர் தங்கள் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும் என்பது தெரியும்.
சாம்-விக்கி-கஜன் கும்பல் நோர்வே அல்லது அமெரிக்க மத்தியஸ்தத்தை நாடவில்லை என்றால், புதிய இளைய தமிழ் அரசியல்வாதிகளை தமிழ் அரசியலுக்கு கொண்டுவர தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதிர்காலத்தில் சம்பந்தன், விக்னேஸ்வரன், பொன்னம்பலத்தின் கட்சிகளை தோற்கடிக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும் எனவும் பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு கூறியுள்ளது.
N.S