தேசபந்துவிற்கு எதிரான வழக்கு நிராகரிப்பு

0
210

பிரதமர் மாளிகை முன்பாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவால் இன்று (02) நிராகரிக்கப்பட்டது.

அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடல் புகாரை உறுதிப்படுத்தும் வகையில் போதிய தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படாததால், பிரதிவாதிக்கு எதிரான வழக்கை பராமரிக்க முடியாது என நீதிவான் முடிவு செய்து, இந்த தனிப்பட்ட புகாரை தள்ளுபடி செய்தார்.

“மைனா கோ கிராமத்தில்” தாக்கப்பட்டு படுகாயமடைந்த வர்த்தகர் சையத் மொஹமட் நியாஸ் மவ்லானாவை மே 11 ஆம் திகதி சட்டத்தரணி அச்சலா சேனவிரத்ன நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மைனா கோ கிராமத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் தாம் கடுமையாக தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தனது கடமைகளை சரியாகச் செய்திருந்தால், அவர் இவ்வாறானதொரு தாக்குதலுக்கு ஆளாகியிருக்கமாட்டார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here