மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 தபால் நிலையங்கள் 24 மணித்தியாலங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொம்பன்னவிடிய, பத்தரமுல்லை, கல்கிசை, நுகேகொட மற்றும் சீதாவகபுர ஆகிய தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்கும்.
பொலிஸாரால் விதிக்கப்படும் அனைத்து அபராதங்கள் மற்றும் தண்டப் பணங்களை மேற்கூறிய தபால் நிலையங்களில் செலுத்த முடியும் எனவும் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் குறிப்பிட்டுள்ளார்.