மேல் மாகாணத்தில் 13 தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்

Date:

மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 தபால் நிலையங்கள் 24 மணித்தியாலங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொம்பன்னவிடிய, பத்தரமுல்லை, கல்கிசை, நுகேகொட மற்றும் சீதாவகபுர ஆகிய தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்கும்.

பொலிஸாரால் விதிக்கப்படும் அனைத்து அபராதங்கள் மற்றும் தண்டப் பணங்களை மேற்கூறிய தபால் நிலையங்களில் செலுத்த முடியும் எனவும் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...