ஹந்தான மலையில் காணாமல் போன மாணவர்கள் கண்டுபிடிப்பு

0
93

ஹந்தான மலைத்தொடரில் மலையேற்றத்தின் போது சிக்கித் தவித்த குறைந்தது 180 பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவில் ராகமவில் உள்ள களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் அடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பகுதியில் நிலவிய அடர்ந்த பனிமூட்டம் ஆரம்பத்தில் மாணவர்களைக் கண்டுபிடிப்பதில் மீட்புக் குழுவினருக்கு கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here