ஆண்டின் இறுதி நாடாளுமன்றக் கூட்டம் 13ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது

Date:

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (05) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) கூடுவதற்கு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை 10ஆம் திகதிக்கு பதிலாக 13ஆம் திகதி கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

முன்னதாக 10ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு நாள் முழுவதும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, செவ்வாய்கிழமை (13) முழு நாளும் தற்போது வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, பெறுமதி சேர் வரி (திருத்தம்) மற்றும் உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு விவாதம் வெள்ளிக்கிழமை (09) நடைபெறும்.

மேலும், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை டிசம்பர் 8ஆம் திகதி (வியாழன்) மாலை 5.00 மணிக்கு நடத்த குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் 03.12.2022 திகதியிட்ட வர்த்தமானி இலக்கம் 2308/62 இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவை டிசம்பர் 8 ஆம் திகதி ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 13ஆம் திகதிக்கு பிறகு, 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற அலுவல் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் செயலர் தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...