ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஓர் இனவாதி – விஜயதாச ராஜபக்ச சாடல்

0
174

மலையக தமிழர்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கிய ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஓர் இனவாதி என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தையே தூண்டுகின்றார். அவரின் தந்தையான குமார் பொன்னம்பலம் முற்போக்குவாதி. ஆனால் குமார் பொன்னம்பலத்தின் தந்தையான ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஓர் இனவாதி.

1950 களில் கம்பளையில் கூட்டமொன்றை நடத்தி, சிங்கள மக்களின் மனங்கள் புண்படும் வகையில் கருத்து வெளியிட்டார். சிங்கள சமூகம் அவருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது.

ஆனால் மலையக தமிழர்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டமூலத்துக்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆதரவு வழங்கினார்.

அப்போதைய காலக்கட்டத்தில் அமைச்சு பதவியில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் இருந்ததால் அந்த முடிவு நல்ல முடிவாக இருந்தது. ஏனைய நேரங்களில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு நான் செய்த சேவையில் பத்து வீதம்கூட அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்திருக்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கு மக்கள் சமாதானத்தையே விரும்புகின்றனர்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here