ராஜபஷ்களுக்கு எதிராக மேலதிக நீதிமன்ற நடவடிக்கை

0
167

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜ்யக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் பொறுப்பு என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் நஷ்டஈடு வழக்குகளை தாக்கல் செய்ய அகில இலங்கை நுகர்வோர் சங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

எதிர்காலத்தில் இது செய்யப்படும் என அதன் செயலாளர் மிலிந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

அப்போதைய நிர்வாகமும் அதிகாரிகளும் எடுத்த தவறான பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்ட வல்லுநர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்குகளை சிவில் வர்த்தக நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாகவும், அகில இலங்கை நுகர்வோர் சங்கம் தற்போது இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

எரிவாயு விபத்தினால் மட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆனால் இன்றும் அரசாங்கம் அதற்கு நீதி வழங்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு வெடிப்புடன், பல்வேறு துறைகளில் முன்னைய ஆட்சிக் காலத்தில் பல பொருளாதாரக் குற்றங்கள் இழைக்கப்பட்டன, அவற்றிற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகள் எந்தப் பயனையும் அளிக்கவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here