ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 600 மில்லியன் டொலர்களை இலங்கை பெறவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடன் தவணையின் இரண்டாவது தவணையை வழங்கப்பட்டதன் பின், ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.