அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட குழு சஜித் அணியுடன் சந்திப்பு

Date:

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ உள்ளிட்ட தூதுக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, திறைசேரியின் உதவி செயலாளர் ரொபர்ட் காப்ரோத், ஐக்கிய அமெரிக்காவுக்க குடியரசுக்கான இலங்கைத் தூதுவர் திருமதி ஜூலி சாங் உள்ளிட்ட குழுவினருக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (6) கொழும்பில் இடம்பெற்றது.

சமகால இலங்கையின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு கவனம் செலுத்தினர்.

USAID நிறுவனத்தின் ஆசியப் பணியகத்திற்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவுர், விர்சா பெர்கின்ஸ் (டொனால்ட் லூவின் பணிக்குழாம் பிரதானி), USAID நிறுவனத்தின் இலங்கை பணியகத்தின் பணிப்பாளர் கேப்ரியல் கிராவ் Gabriel Grau,
USAID இலங்கைப் பணியகத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான Asta Zinbo, தென் ஆசியாவிற்கான திறைசேரியின் செயலாளர் ஜெரோட் மேசன் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் விவகார விசேட நிபுணர் நஸ்ரின் மரிக்கார் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம், ரிஷாட் பதியுதீன், பழனி திகாம்பரம், அஜித் பீ பெரேரா, முஜிபுர் ரஹுமான், காவிந்த ஜயவர்த்தன் மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...