மீண்டும் ஒரு கோட்டா நாட்டுக்கு தேவை இல்லை – அஜித்

Date:

நாட்டு மக்கள் படும் துன்பங்களை ஊடாக அதிகாரத்தைப் பெறுவது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையோ அல்ல, நாட்டை உருவாக்கி அதிகாரத்தைப் பெறுவதே கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

கோட்டாபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், 5 வருடங்கள் அமைச்சரவை அமைச்சராக பதவி வகிக்காத ஒருவரால் நாட்டை ஆள முடியாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மற்றுமொரு கோட்டாபய பிறப்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு மக்கள் இயக்கம் என்றும் அது பணம் சம்பாதிக்கும் இயக்கம் அல்ல என்றும் சஜித் பிரேமதாச நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பது நடவடிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...

குண்டுத் தாக்குதல்கள் கதை பொய்

கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...