இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

0
58

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக எஸ்.எம்.டி.எல்.கே.டி.அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று வழங்கினார்.

சில தினங்களுக்கு முன்னர், அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவ, அமைச்சரவை தீர்மானங்களை அமுல்படுத்தவில்லை என குற்றம் சுமத்தி, அந்தப் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்விஸ் இலங்கை நிர்வாக சேவையில் உயர் பதவிகளை வகித்தவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here