டயானா வழக்கில் சஜித், மத்தும பண்டாரவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை!

0
80

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த வழக்கின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை எதிர்வரும் ஜனவரி மாதம் 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உதித இகலஹேவா சுட்டிக்காட்டிய கருத்துக்களின் பிரகாரமும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார சத்தியகடதாசி மூலம் முன்வைத்த தகவல்களையும் கருத்தில் கொண்டு DSP 500/2022 இலக்கம் கொண்ட வழக்கு இன்று (09) விசாரணைக்கு அழைக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் இவர்களுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசியலமைப்பின் பிரகாரம், அதில் அங்கம் வகிக்கும் ஒருவர் வேறு கட்சியில் உறுப்பினராக இருக்க முடியாது என சட்டத்தரணி உத்திக இகலஹேவா அந்த கருத்து்களின் அடிப்படையில் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here