குடாநாட்டிலும் பெரும் சேதங்கள்!

Date:

‘மாண்டஸ்’ புயலின் தாக்கம் வடக்கு, கிழக்கில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீசிய அதிக காற்றின் காரணமாக பாரிய மரங்கள் பல சாய்ந்து வீழ்ந்துள்ளதோடு சில வீடுகளும் சேதமடைந்துள்ளன.

நேற்றிரவு யாழ். குடாநாட்டிலும் அதிக மழையுடன் கடும் குளிர் நிலவிய அதேநேரம் அதிக காற்றும் வீசியது.

இதன் காரணமாகப் பல இடங்களில் வீடுகளிலும், வீதிகளிலும் பெருமளவு மரங்கள் அடியோடு சாய்ந்து வீழ்ந்தன. இதனால் பல மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டன.

ஊர்காவற்றுறை மற்றும் காரைநகரில் இரு பனை மரங்கள் வீடுகளின் மீது வீழ்ந்தமையால் இரு வீடுகளும் சேதமடைந்தன.

இதேபோன்று மருதங்கேணி – வத்திராயனில் ஒரு பனை முறிந்து வீதியில் வீழ்ந்தமையால் சில வீடுகளுக்கான மின்சாரம் முற்றாகத் தடைப்பட்டது.

இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட இடங்களில் பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்து வீதியில் வீழ்ந்தன.

வீதியில் வீழ்ந்த மரங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபையின் பணியாளர்களால் இன்று பகல் அகற்றப்பட்டன.

இதேவேளை, கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை பிரதேசங்களிலும் சேதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்திலிருந்து தீவகங்களுக்கான படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...