சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் கோதுமை மாவு தரமற்றது என பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்
பேக்கரி பொருட்களுக்கு நிலையான கட்டுப்பாட்டு விலை இல்லாததால் பேக்கரி தொழிலில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் மாறுபடுவதால், பேக்கரி தொழிலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா குறிப்பிட்டார்.
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேக்கரி உற்பத்தியாளர்கள் பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
எவ்வாறாயினும், சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் கோதுமை மா தரமற்றது என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
N.S