இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சு : இன்று மாலை சர்வகட்சி மாநாடு!

Date:

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் பேச்சுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை இன்று சந்தித்துப் பேசுகின்றார்.

இந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரசன்னத்துக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்தப் பேச்சில் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி., பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவுள்ளன.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், தாம் இந்தச் சந்திப்பில் பங்கேற்கமாட்டோம் என்று அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இன்று நடைபெறும் இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்களக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...

ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசியல் நியாயம்

-மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி...

மீண்டும் சந்தர்ப்பம் கோரும் மகிந்த ராஜபக்ச!

நாட்டின் மக்கள் தற்போது மிகவும் கடினமான வாழ்க்கை நிலையை எதிர்கொண்டு வருவதாகவும்,...