விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்படலாம் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தனது அமைப்புகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளது.
“விரைவில் பிரச்சினையை தீர்க்க உயர் ஸ்தானிகராலயம் பணியாற்றி வருகிறது. இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்” என்று உயர் ஸ்தானிகராலயம் மேலும் கூறியுள்ளது.
N.S