13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் நமது நாட்டில் பல ஆரம்ப புள்ளிகள் உள்ளன. அதனை முன்னுதாரணமாக கொண்டு இந்த விடயத்தை செய்ய வேண்டும்.
எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் சில தீர்வுகளை எட்ட வேண்டுமென ஜனதிபதி கூறினார். ஆகவே ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க முடியாது. 13ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து ஆரம்பிப்போம் என்றேன். அது முழுமையான தீர்வாக இல்லாவிடினும் அதில் இருந்து ஆரம்பித்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தோம் எனவும் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தேன்.
N.S