இலங்கையில் வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அரசியல் ஸ்திர நிலையை உறுதிப்படுத்தும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதென தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர், அரசாங்கத்தின் வரவு செலவு முகாமைத்துவத்துக்கான பின்னணி உருவாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.