எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வர்த்தகத் துறையில் முதலிடத்திற்கு வந்துள்ள தம்மிக்க பெரேரா, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், பொருளாதாரத்தின் பல துறைகளிலும் கற்று அனுபவம் பெற்றவர்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறப்படும் வேட்பாளர்களில் தம்மிக்க பெரேரா மாத்திரமே இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான குறிப்பிட்ட, நடைமுறை வேலைத்திட்டத்துடன் கூடிய செயற்திட்டமொன்றை முன்வைத்துள்ளார்.
தம்மிக்க பெரேரா இதற்கு முன்னர் போக்குவரத்து அமைச்சின் செயலாளராகவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட DP கல்வி சமூகப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் 2023 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட DP Education IT மூலம் இலங்கையில் 15 இலட்சத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகின்றார்.
கோர்டிங் திட்டத்தின் மூலம் 200,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தற்போது தொழில் சார்ந்த கணினி மொழிக் கல்வி அளிக்கப்படுகிறது.





