இந்தியா, இலங்கை இடையே பயணிகள் படகு சேவை ஆரம்பம்

Date:

இந்தியா மற்றும் இலங்கை இடையே பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.

இந்தப் படகுச் சேவையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைக்கும்.

இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

பயணிகள் படகு சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும் வாய்ப்புள்ளது. இணைப்பை மேம்படுத்த பல்வேறு கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த சேவை தொடங்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலை மற்றும் இலங்கையின் கொழும்புக்கும் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை துறைமுகங்களில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய சேவையின் கீழ் உள்ள கப்பல்கள் 300 முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்லும் பயணத்திற்கு மூன்றரை மணி நேரம் ஆகும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...