பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

Date:

பேராதனை கலை பீட ஆசிரியர் சங்கம் (PAFTA) அறிவித்திருந்த வேலைநிறுத்தம் இன்றுடன் (டிச.19) முடிவடைகிறது.

அதன்படி இன்று முதல் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என கலை பீட ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் குழு தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பாக இல்லை என்று கூறி, தேர்வு தொடர்பான அனைத்து செயல்பாடுகள் உட்பட அனைத்துப் பணிகளையும் முழுமையாகப் புறக்கணிப்பதாக கலை பீட ஆசிரியர் சங்கம் டிசம்பர் 14 முதல் 18 வரை ஐந்து நாள் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தத.

எனவே, இந்த வேலைநிறுத்தம் மாணவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுப்பதைத் தடுப்பதற்கும், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக சொத்துக்களைப் பாதுகாப்பது சம்பந்தப்பட்ட நிர்வாகங்களின் முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்வதற்கான முதல் படியாக இருக்கும் என்று கலை பீட ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் துணைவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 12 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...