வரலாற்றில் அதிக நிவாரணம் வழங்கிய அனுர அரசாங்கம்

0
25

நாட்டின் வரலாற்றில் பேரழிவு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் விவசாயிகளுக்கு அதிகளவிலான நிவாரணங்களை வழங்கிய அரசு தற்போதைய அரசே என வர்த்தகம், வாணிபம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பயிர் சேதங்களுக்கு மட்டுமல்லாமல், உயிரிழப்புகள், சொத்துச் சேதங்கள், வீடுகளை சுத்தம் செய்வதற்கும், வீடுகளில் இழந்த பாத்திரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மீண்டும் வாங்குவதற்கும் கூட நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிவாரணங்கள் எதிர்க்கட்சிக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதனால் தான், பேரழிவு நேரங்களில் விவசாயிகளுக்கு வரலாற்றிலேயே அதிக நிவாரணங்களை வழங்கியது இந்த அரசே” என அவர் தெரிவித்தார்.

கலா ஓயா வெள்ளப்பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் நடவடிக்கையின் போது, அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதியை நேற்று (18) பார்வையிடச் சென்ற சந்தர்ப்பத்தில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here